×

அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர முறையீடு.! அவசர வழக்காக விசாரிக்கக் கோரிக்கை

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் அவர் கைதாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 8 சம்மனுக்கு ஆஜராகாமல் இழுத்தடிப்பு செய்த டெல்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை அமலாக்கத்துறை கைது செய்யக்கூடாது என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லி அரசின் 2021 – 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத் துறை அனுப்பிய 8 சம்மன்களை அவர் நிராகரித்தார். இந்த நிலையில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்யக்கூடாது அவர் டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று நிராகரிக்கப்பட்டது.

இப்படியான சூழலில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மாலை 7 மணி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவரது இல்லத்திற்கே சென்று அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். அவர் கைதாகலாம் என தகவல் பரவி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முறையீடு செய்துள்ளார். அமலாக்கத்துறை சோதனைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி கெஜ்ரிவால் முறையீடு செய்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்ய முயற்சிப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

The post அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர முறையீடு.! அவசர வழக்காக விசாரிக்கக் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Supreme Court ,Chief Minister Arvind Kejriwal ,Delhi Aam ,Atmi ,Enforcement Department ,8th Summon ,Dinakaran ,
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...